Published : 28 Apr 2018 08:29 AM
Last Updated : 28 Apr 2018 08:29 AM

2017-செப்டம்பர் முதல் 2018- பிப்ரவரி வரை 31.1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: நிதி ஆயோக் தகவல்

இந்தியாவில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் புதிதாக 31.1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் புள்ளிவிவரங்கள்படி அனைத்து வயது பிரிவிலும் புதிதாக சம்பளப் பட்டியலில் இணைந்துள்ளவர்கள் அடிப்படையில் இந்த தகவலை நிதி ஆயோக் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனை அமைப் பான நிதி ஆயோக் கூறியுள்ள தாவது,

வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மை இந்த எண்ணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு குறித்த அனைத்து ஊகங்களுக்கும் இதன் மூலம் விடை கிடைத்துள்ளது.

மாதாந்திர சம்பளத் தகவல்கள் குறித்த விவரங்களை இபிஎப்ஓ ஆணையம், தொழிலாளர் மாநில காப்பீடு கழகம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. இந்த புள்ளிவிவரங்கள்படி முக்கிய துறைகளின் விவரங்களை ஆராய்கிறபோது புதிதாக வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இபிஎப்ஓ ஆணைய விவரங்கள்படி 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அனைத்து வயது பிரிவிலும் 31.10 லட்சம் பேர் புதிதாக சம்பளக் கணக்கில் இணைந்துள்ளனர்.

நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் ஆவணங்களும் சேர்க்கப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை என்கிற ஊகங்களுக்கு இந்த அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் மூலம் விடை கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் விளைவாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முக்கிய பெரு நகரங்களில் இருந்து 4.2 லட்சம் சம்பளக் கணக்குகள் மூலம் நியூ பென்ஷன் திட்டத்தின் சேர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது நியூ பென்ஷன் திட்டத்தின் மூலம் 50 லட்சம் தொழிலாளர்களின் சேமிப்பினை மாநில மற்றும் மத்திய அரசு கையாண்டு வருகின்றன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x