Published : 15 Apr 2018 01:28 PM
Last Updated : 15 Apr 2018 01:28 PM

இந்த ஆண்டு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் - சென்னையில் நிலவரம் என்ன?

இந்தியாவின் தனியார் துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என பொருளாதார சூழலை கணித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சென்னை நிலவரம் குறித்தும் தகவல் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரபல மனிதவள ஆலோசனை நிறுவனம் ஒன்று நாடுதழுவிய அளவில் ஆய்வு நடத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது

‘‘பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட நெருக்கடிகளால் இந்திய தொழில்துறை திணறி வருவதால் பொருளாதார மந்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதுடன், பலர் வேலையிழக்கும் சூழலும் இருந்து வருகிறது.

பொருளாதார நெருக்கடி சற்று தளர்வடைய தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு தொழில்துறையை சூழ்ந்து இருக்கும் பிரச்சினைகள் சற்று விலக வாய்ப்புள்ளது. சற்ற நிலைமை சீரடைய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இந்த நிதியாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எந்த அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 75 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் 91 சதவீதம் பேருக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, அதிக திறமை, அதிக தேவை உள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் அதிக சம்பள உயர்வு இருக்கலாம்.

குறிப்பாக 47 சதவீத நிறுவனங்கள் முககிய ஊழியர்களுக்கு 1.5 மடங்கு அளவிற்கு கூட சம்பள உயர்வு வழங்க தயாராக உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு 9  முதல் 12 சதவீதம் வரை சராசரியாக சம்பள உயர்வு இருக்க வாய்ப்புள்ளது.

நகரங்களை பொறுத்தவரை சென்னை, மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களை விடவும், பெங்களூர் மற்றும் டெல்லியில் இந்த ஆண்டு சம்பள உயர்வு அதிகம் இருக்கலாம்’’ என தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x