Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

பாஸ்கர் பிரமானிக் - இவரைத் தெரியுமா?

$ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர். இந்தியா சம்பந்தப்பட்ட வியாபார மேம்பாடு, ஆராய்ச்சி, மார்கெட்டிங் உள்ளிட்ட அனைத்தையும் கவனிப்பவர்.

$ ஐடி துறையில் 35 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர். இதற்கு முன்பு ஆரக்கிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதற்கு முன்பு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இங்கு 13 வருடங்கள் வேலை பார்த்தார்.

$ மேற்கு வங்காளத்தில் பிறந்தவர் இவர், ஐஐடி கான்பூரில் இன்ஜினீயரிங் முடித்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பயிற்சி பெற்றவர்.

$ டிஜிட்டல் எக்யூப்பென்ட், புளுஸ்டார், நெல்கோ ஆகிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்.

$ இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), நாஸ்காம் உள்ளிட்ட பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x