

மதுரை: நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது ஜூனில் நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி, குத்தகை வரி மற்றும் கடைகள் வாடகை போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி தான் மாநகராட்சிக்கு பிரதான வரியாக உள்ளது.
ஆறு மாதத்துக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படும். இந்த வருவாயை கொண்டே, ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் வந்த பிறகு வரிவசூல் முறைப் படுத்தப்பட்டது. அதிக சொத்து வரி பாக்கியிருக்கும் நிறுவனங்கள், பாதி வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள், பொது மக்கள் என 3 பிரிவாக பிரித்து அதிக வரி பாக்கி இருக்கும் நிறுவனங்கள் மீது சீல் வைக்கும் நடவடிக்கை எடுத்தது.
இதற்கு பலன் கிடைத்ததால் பெரு நிறு வனங்கள் கூட வரி பாக்கியில் 75 சதவீதம் வரை செலுத்தி சீல் நடவடிக்கையை தவிர்த்தனர். மேலும் பொதுமக்கள் எளிதாக வரி செலுத்த விடுமுறை நாட் களிலும் வசதி ஏற்படுத்திட ஆணை யர் நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு ரூ. 354 கோடி வரி பாக்கியில் ரூ.221 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 197 கோடி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மக்களவை தேர்தல் வந்ததால் வரி வசூல் நடவடிக்கை மந் தமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி ஏமாற்றி வரும் நிறுவனங்கள், தனி நபர்கள் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கையில் எடுத்தார். அந்த பட்டியலில் உள்ள நிறு வனங்கள், தனி நபர்கள் வழக்கு விவரங்களை ஆராய்ந்து, அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து மறு விசாரணை மேற்கொள்ள வழக்கு போட மாநகராட்சி வழக் கறிஞர் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரி செலுத்தாமல் ஏமாற்றும் அரசியல் பின்புலம் உள்ள தனி நபர்கள், நிறுவ னங்களுக்கு நெருக்கடி கொடுத்து வரிவசூல் செய்யும் மாநகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களை கூறி வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக ரூ.10 லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி நடக்கிறது. நீண்ட காலமாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர் களின் சொத்தை சட்டப்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக் கவும் அதிகாரம் இருக்கிறது. அதனால் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.