Published : 11 Apr 2018 09:02 AM
Last Updated : 11 Apr 2018 09:02 AM

ஃபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்; பிரச்சினையை விரைந்து முடியுங்கள்- ஜூகர்பெர்க்கிற்கு ஜாக் மா ஆலோசனை

ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் திருட்டு பிரச்சினையில் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள அலிபாபா நிறுவனர் ஜாக் மா, பிரச்சினையை விரைந்து முடியுங்கள் என்று ஜூகர்பெர்கை வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் ஒழுங்குமுறை அமைப்புகள், பயனர்கள் உள்ளனர். எனவே இந்த விஷயத்தை மிகத் தீவிரமாக கையாளவேண்டும். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வளரும் சிக்கல்களை ஜூகர்பெர்க் விரைவாகக் கையாள வேண்டும் என்றார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமாக உருவான ஃபேஸ்புக் நிறுவனம் இந்த சர்ச்சைகளை உடனே நிறுத்த வேண்டும். போவோ மாநாட்டில் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பான கேள்விகளை தவிர்த்த ஜா மா, சர்ச்சையை எதிர் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உதவ முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கைபடி நிறுவனத்தின், பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன. ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்கிற அரசியல் ஆய்வு நிறுவ னம் இதனை மேற்கொண்டது. இந்த தகவல்கள் வெளிவந்த பின்னர் பலர் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஜூகர் பெர்க் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எனக்கு தெரிந்து இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்றும் ஜாக் மா கூறினார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமெரிக்க பாராளுமன்றம் அமைத்த குழுவின் முன்பு ஜூகர்பெர்க் அளித்துள்ள விளக்கத்தில், தவறுக்கு பொறுப்பேற்கிறேன். இது என்னுடைய தவறு என கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த தகவலை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு வெளியிட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x