Published : 25 Apr 2024 06:36 AM
Last Updated : 25 Apr 2024 06:36 AM

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் இந்தியா 4-ம் இடம்

கோப்புப்படம்

ஸ்டாக்ஹோம்: கடந்த 2023-ம் ஆண்டில் ராணுவக் கட்டமைப்புக்கு உலக அளவில் 2,443 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத் தில் உள்ளது. 2023-ம் ஆண்டு இந்தியா ராணுவத்துக்கு செலவிட்ட தொகை 84 பில்லியன் டாலர் (ரூ.6.9 லட்சம் கோடி) ஆகும்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா (ரூ.76 லட்சம் கோடி), 2-வது இடத்தில் சீனா (ரூ.24 லட்சம் கோடி), 3-வது இடத்தில் ரஷ்யா (ரூ.9 லட்சம் கோடி) உள்ளன. 5-வது இடத்தில் சவூதி அரேபியா(ரூ.6.3 லட்சம் கோடி), 6-வது இடத்தில் பிரிட்டன்(ரூ.6.2 லட்சம் கோடி), 7-வது இடத்தில் ஜெர்மனி(ரூ.5.5 லட்சம் கோடி), 8-வது இடத்தில் உக்ரைன் (ரூ.5.3 லட்சம் கோடி), 9-வது இடத்தில் பிரான்ஸ் (ரூ.5 லட்சம் கோடி), 10-வது இடத்தில் ஜப்பான் (ரூ.4.15 லட்சம் கோடி) உள்ளன.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா,மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஆசிய ஆகிய 5 பிராந்தியங்களில் ராணுவத்துக்கான செலவினம் அதிகரித்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x