7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது வீட்டு வாடகைப்படியும் அதற்கு ஏற்றார்போல் உயர்த்தப்படும். ஆனால், இதுவரை வீட்டு வாடகைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இது குறித்து ருத்ரா மற்றும் ருத்ரா சட்ட அலுவலக நிறுவனர்களில் ஒருவரான சஞ்சீவ் குமார் கூறுகையில்: ‘‘வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது. பொதுவாக வீட்டு வாடகைப்படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொருத்ததே’’ என்று கூறினார்.

வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன. இதில் 7-வது சம்பள கமிஷன் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டிய போது அடிப்படை சம்பளத்தில் X, Y, மற்றும் Z நகரங்களுக்கு முறையே வீட்டு வாடகைப்படியானது 27%, 18% மற்றும் 9% என முன்பு கொடுக்கப்பட்டு வந்தது.

பிறகு தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப்படி விகிதங்களை முறையே X, Y மற்றும் Z நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் 30%, 20% மற்றும் 10% என திருத்தியுள்ளது. ஆகவே ரூ.35 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்கள் இனி, X நகரவாசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டுவாடகைப்படி ரூ. 10,500 வழங்கப்படும். Y நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். Z நகரவாசிகளுக்கு வீட்டுவாடகைப்படி ரூ.3, 500 வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in