

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இ-சைக்கிள் ஓட்டிக்கொண்டே ‘போலே ஜோ கோயல்’ என்ற பாடலை பாடும் விளம்பர புரோமோ வீடியோ ஒன்று கவனம் பெற்றுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மின்சார சைக்கிள் தயாரிக்கும் இந்தியாவின் E-Motorad நிறுவனத்தின் விளம்பரம் அது.
அதில் அந்நிறுவனத்தின் டி-ரெக்ஸ் ஏர் இ-சைக்கிளை தோனி ஓட்டி சொல்கிறார். அப்போது இரண்டு குயில்கள் அந்த சைக்கிளின் அம்சங்கள் குறித்து விவரிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பாடலுக்கு தோனி நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. தோனியை போன்ற தோற்றம் கொண்ட நபர் ஒருவரும் இதே பாடலை பாடி நடந்து வரும் வீடியோ ஒன்றும் இதற்கு முன்பு வைரலாகி உள்ளது. இதன் ஒரிஜினல் வெர்ஷனை ஃபால்குனி பதக் பாடியுள்ளார்.
“எங்கள் நிறுவனத்தின் புரோமோஷனுக்காக இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்தோம். தோனிக்கும், ‘போலே ஜோ கோயல்’ பாடலுக்கும் உள்ள கனெக்ஷனை இதன் மூலம் வெளிக்காட்ட முயற்சித்தோம். இது ஒரு வேடிக்கையான முயற்சி தான். அதற்கு இப்போது சிறந்த வரவேற்பும் கிடைத்துள்ளது” என E-Motorad நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஆதித்யா தெரிவித்துள்ளார்.
டி-ரெக்ஸ் ஏர்: சிறப்பு அம்சங்கள்