சுங்கச்சாவடி கட்டண உயர்வு 2 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பு

சுங்கச்சாவடி கட்டண உயர்வு 2 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் குறிப்பிட்ட அளவில் உயர்த்தப்படுகிறது. இதன்படி கடந்த 1-ம்தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுங்கச்சாவடி கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த வாரம் கோரிக்கை வைத்திருந்தது.

இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில், கட்டண உயர்வை ஏப். 1 முதல் அமல் படுத்த வேண்டாம் என சுங்கச்சாவடிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மார்ச் 30-ம் தேதி வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தனர். மேலும் இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, கட்டண உயர்வை 2 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று தெரிவித்தது. இதுதொடர்பாக சுங்கச்சாவடிகளுக்கு கடிதம்அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால் ஏற்படும் இழப்பை ஆணையம் ஈடு செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in