Last Updated : 16 Feb, 2018 07:52 AM

 

Published : 16 Feb 2018 07:52 AM
Last Updated : 16 Feb 2018 07:52 AM

முடிவுகளை எடுக்க உதவும் முன்னுரிமைகள்

 

லை சிறந்த தலைமை பண்புக்குச் சரியான முன்னுரிமைகளும் சரியான உடன் பணியாளர்களும் சரியான உறவு முறைகளும் மிக முக்கியமான காரணிகளாகும். சீரிய தலைமை சிறந்த முடிவுகளை எட்ட இந்த மூன்றும் மிகவும் முக்கியம்.

இந்த நூலின் ஆசிரியர்கள் பதினைந்தாயிரம் நிறுவன தலைவர்களிடமிருந்து நேர்காணல் மூலமும் தரவுகள் மூலமும் திரட்டி வியக்க வைக்கும் முடிவுகளை அளிப்பார்கள் என்று எதிர் பார்த்தால். நேர் மாறாக எளிமைக்கும் புரிதலுக்கும் முன்னுரிமை அளித்து சாதாரண முறையில் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். முன்னுரிமை தான் முக்கியம் என்றால் பிரச்சினையே எந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பது என்றும், ஏகப்பட்ட முன்னுரிமை பெற்ற செயல்களில் எதை செயல்படுத்துவது என்ற குழப்பமுமே ஆகும் என்று கூறுகிறார்கள்.

முன்னுரிமை நிகழ்வுகள்

முன்னுரிமை அளிக்கும் முடிவுகளில் ஒன்றிற்கு ஆம் என்ற விடை அளித்தால் மற்ற அனைத்திற்கும் இல்லை என்ற விடை தான் பொருந்தும். அந்த இல்லை என்ற விடைகளில் மனதுக்கு பிடித்த, நேரத்திற்கு ஏற்ப குழுப்பணியாளர்கள் விரும்பி சிலவற்றை தள்ளித்தான் ஆக வேண்டும். ஏகப்பட்ட முன்னுரிமைகள், முன்னுரிமை என்ற வார்த்தையை பொருள் அற்றதாக்கிவிடும்.

முன்னுரிமை என்னும் பதத்திற்கு புறந்தள்ளி பலவற்றில் முக்கியமான ஒன்றே சிறந்தது என்ற பொருளே சரியாக பொருந்தும். தொழில் நுட்ப நிறுவனத் தலைவர் மேநார்ட் வெப் (Maynard Webb) என்பவர் ஆரம்ப காலங்களில் ஐபிஎம் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியை தொடங்கினார். ஆனால் மட மட வென்று முன்னேறி இபே (eBAY) தொழில் நுட்ப நிறுவனத்தில் தலைவராக உயர்ந்தார். கணினிச் சார்ந்த விற்பனை நிறுவனம் கிட்டத்தட்ட நொறுங்கிப் போகும் அளவில் இருந்தது.

தெளிவான தலைமை இல்லாத குழப்பமான மேலாண்மைக் குழுவை தத்தெடுத்து மேநார்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் முன்னுரிமை அளித்து நிறுவனத்தை வேகமாக முன்னேற்றி வழி நடத்தத் துணிந்தார். அப்போது நான்கு முன்னுரிமை நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்தார் அவையாவன : கொள்திறன் பிரச்சினைகளை தீர்த்தல், வளர்ச்சியை ஊக்குவித்தல், புதுமை படைத்தல் மற்றும் வளங்களை மறு ஒதுக்கீடு செய்து வளர்ச்சிக்கு வித்திடுதல் ஆகியன.

கொள்திறன் பிரச்சினைகளில் முயலுக்கு மூன்றுகால் என்ற முனைப்பை மாற்றி வேக நடைக்கு வித்திட்டார். வேக வளர்ச்சியைக் கால அட்டவணையோடு பொருத்திக் குறித்த காலத்தில் இலக்குகளை அடைவதில் முனைப்புக் காட்டினார். ஏராளமான நிறுவனங்களில் இருந்து தனித்து நிற்கும் புதுமைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தார். பொருட்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை இல் லாத இடங்களில் இருந்து வளங்களை எடுத்து முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தும் பொழுது பொருட்கள் மேம்பாடு வேக வளர்ச்சி கண்டன.

சரியான முடிவு

ஒரு பணியின் ஆரம்ப காலத்திலோ அல்லது பிரச்சினைகள் ஏற்படும்போதோ முன்னுரிமைகளை வழிவகுக்கலாம். சில நேரங்களில் சந்தையில் ஏற்படக் கூடிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாற்றங்கள் முன்னுரிமையை மாற்றி அமைக்கலாம். அது போன்ற நேரங்களில் தேவைகளுக்கேற்ப முன்னுரிமை அளிப்பது விவேகம்.

அது போன்று நுகர்வோர் தேவை அறிந்து அதற்கு தக்கவாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நுகர்வோர் கையளித்தாலும் அவைகளை ஏற்கக் கூடிய பக்குவம் வேண்டும் சரித்திரத்தில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி இதற்கு சிறந்த உதாரணமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு மோட்டோரோலா நிறுவனம் ஜூயெர்ஜென் ஸ்டார்க் என்ற மேலாளரை ஆர்ஏஇஸட்ஆர் என்ற அலைபேசியை சந்தைப்படுத்தி விற்பனையில் சாதனை படைக்குமாறு ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்தார்கள். நுகர்வோ ரின் மிக முக்கியமான பத்து முன்னுரிமைகள் அந்த அலைபேசியில் இல் லாத காரணத்தால் அது ஏற்கத் தக்கதாக இல்லை. அதுபோன்ற தவிர்க்கப்பட்ட அம்சங்களை இணைப்பதற்கு மிக அதிக செலவு பிடிக்கும்.

இந்தச் சூழ்நிலையில் அலைபேசியை விற்பதா, சந்தையைத் துறப்பதா, ஈட்டியவரை விற்று முதலைக் காப்பதா என்ற ஏராளமான சலனங்கள். அந்த நேரத்தில் மிகச் சரியான முடிவாக அலை பேசியை சந்தைப் படுத்துதலைக் காட்டிலும் எவ்வளவு சீக்கிரம் பொருட்களை விற்று தீர்த்து இழப்பு ஏற்பட்டாலும பாதகம் இல்லை என்ற முன்னுரிமை முடிவை எடுத்ததால் நிறுவனம் பிழைத்தது.

முன்னுரிமைகளை இணைப்பது என்பது வேறு இரண்டு செயல்களால் நிகழும் ஒன்று யார் சரியான நபர்கள் அந்த சரியான நபர்களிடம் நேர்மறை உறவு முறைகள் உள்ளனவா என்பதை உணரும் பொழுது மூன்றும் இணைந்து முன்னுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

மிக அதிக சக்தியுடனும், வேகத்துடனும் குழு அங்கத்தினர்களை பயன்படுத்தி இலக்குகளை அடையும் மேலாளர்கள் மிக அதிக அளவில் வெற்றியைக் குவிப்பார்கள். சாதா ரண நிலையில் இருக்கும் மற்ற மேலாளர்களைக் காட்டிலும் இவர் கள் வெகுவேகமாக வெற்றி பெறுவார்கள்.

மேலும் நம்பிக்கையின் காரணமாக தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை சரியானதாக அமையும். சரி யான உறவு முறைகளின் மூலம் மேலதிகச் சக்திகள் கொண்டு செயல்படும் பொழுது எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கின்றன. முன்னுரிமை நிர்ணயிக்கும் பொழுது அந்த முடிவுக்கு ஏற்ப பணியாற்றும் சரியான நபரும் அவர்களின் நேர்மறை உறவு முறைகளும் மிக முக்கியமான காரணிகளாகக் கருதப்படு கின்றன.

வெற்றிக்கு வழி

நீண்ட அகன்ற தரவுகளின் அடிப்படையில் தோல்விகளுக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பொழுது சரியான நபர்களைக் குழுவில் சேர்க்காதது செயல்பாடுகளில் சங்கடங்களையும் தோல்விகளையைம் ஏற்படுத்தியே தீரும் என்பதற்கு நூல் ஆசிரியர்கள் வருகின்றார்கள். சில வேளைகளில் 14 விழுக்காடு தலைவர்கள் அனைத்தும் அமையப்பெற்று சரியான முன்னுரிமையைத் தேர்ந்தெடுத்து வெற்றியையும் அடைகின்றார்கள்.

அதற்கு மிக முக்கியமான காரணமாக திறமையான பணியாளர்களை ஏற்று சரிவர பணி செய்யாத பணியாளர்களை விடுவித்து குழுக்களை ஒருங்கிணைத்து சரியான முறையில் சரியான திசையில் குழுவை வழிநடத்தச் செலவிடும் காலம் மற்றும் நம்பிக்கை ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அனைத்துத் தலைவர்களும் அனைத் துக் காரணிகளிலும் வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று முதல் பத்து விழுக்காடுகள் தொடர்ச்சியாகத் தங்கள் வேலை நாட்கள் முழுவதும் வெற்றியைக் குவித்திருக்கலாம்.

மேலும் பத்து விழுக்காடு தலைவர்கள் தங்களுடைய குழு நபர்களை மிக அதிக சக்தியுடன் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் பணியாற்ற வைக்க முடியும் இவைகளைத் தாண்டி எந்த நேரமும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று முன்னுரிமைகளை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் வெற்றியை தவிர மற்ற அனைத்தையும் அடையலாம். இந்த நூலின் மிக முக்கிய செய்தியே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருந்தாலோ முழுமையான வெற்றி ஆகாது. மாறாக, மூன்றும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி செயல்படும்பொழுது வெற்றி மாறாது.

உதவிகரமான சில யோசனைகளும், வழிமுறைகளும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்னேற்றத்தை நோக்கி நகர்வது பற்றி குறிப்பிட்டிருப்பதும் இந்த நூலின் சிறப்பாகும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x