ஸ்கூட்டருக்கு `குட் பை’

ஸ்கூட்டருக்கு `குட் பை’
Updated on
1 min read

ஒரு காலத்தில் ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் ஸ்கூட்டர்தான் என்ற அளவுக்குப் பிரபலம். பஜாஜ் நிறுவனம் பிரபலமானதும் ஸ்கூட்டர் தயாரிப்பினால்தான் என்றால் அது மிகையல்ல. ஆனால் அந்த நிறுவனமே இப்போது ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்திவிட்டது. இனியும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கப் போவதில்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

1980-களின் பிற்பாதியில் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால் பதிவு செய்துவிட்டு குறைந்தபட்சம் 6 மாதமாவது காத்திருக்க வேண்டும். பிரீமியம் தொகையில் ஸ்கூட்டர் வாங்கியவர்களும் உண்டு.

சாலை வசதி மேம்படுத் தப்படாத நாள்களில் பஞ்சர் அடிக்கடி நிகழும். இதனால் ஸ்டெப்னியுடன் வந்த ஸ்கூட்டர் சிறந்த போக்குவரத்து வாக னமாகத் திகழ்ந்தது. ஆனால் இப்போதோ மோட்டார் சைக்கிளை விரும்புவோர்தான் அதிகம். பஜாஜ் சேடக் பிராண்ட் ஸ்கூட்டரால் பிரபலமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இப்போது மோட்டார் சைக்கிளைத்தான் தயாரிக்கிறது. தனது நிறுவன பெயரில்லாமல் பிராண்டுகளின் மூலம் பிரபலப்படுத்தும் உத்தியை இளம் தலைமுறை நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கைக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தந்தை ராகுல் பஜாஜ், ஸ்கூட்டர் தயாரிப்பை படிப்படியாகக் கைவிடலாம் என்ற போதுகூட பல்சர், டிஸ்கவர் என்ற பிராண்டு பெயர்களில் மோட்டார் சைக்கிளைத் தயாரித்து பிரபலப்படுத்திவிட்டார் ராஜிவ் பஜாஜ்.

நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபடுமா என்று சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, விஜய் மல்லையாவுக்கு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் எப்படி நஷ்டமேற்படுத்திய தொழிலாக அமைந்ததோ அதைப்போல ஸ்கூட்டர் தயாரிப்பும் தங்களுக்கு அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ, இனி ஸ்கூட்டர்களை அந்த நாள் திரைப்படங்களில் மட்டுமே காண முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிடும் என்பது நிச்சயம்.

ராஜிவ் பஜாஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in