Published : 01 Feb 2018 09:05 AM
Last Updated : 01 Feb 2018 09:05 AM

சென்னையில் பட்ஜெட் கலந்தாய்வு கூட்டம்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் திட்டங்கள் பல இருக்கலாம் என பரவலான கருத்து நிலவுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அதிலுள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராயும் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய தொழில் வர்த்தக சபை (சிக்கி) ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டம் கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் பிப்ரவரி 3-ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மத்திய நிதித்துறை செயலர் எஸ். நாராயண் தலைமை விருந்தின ராக பங்கேற்கிறார்.

சிக்கி தலைவர் ரஃபீக் அகமது, துணைத் தலைவர் ஆர். கணபதி, பிசினஸ் லைன் நாளிதழின் ஆனந்த் கல்யாணராமன், ஆடிட்டர் எம்.ஆர். வெங்கடேஷ், மூத்த வழக்கறிஞர் கே.வைத்தீஸ்வரன் உள்ளிட்டோரடங்கிய குழு பட்ஜெட் குறித்து கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். பொதுமக்களும், விருப்பமுள்ளவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x