Published : 26 Mar 2024 06:06 AM
Last Updated : 26 Mar 2024 06:06 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.49,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,205-க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.49,640க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,800 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x