தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு

தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் ரூ.760 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த 12-ம் தேதிபவுன் விலை ரூ.49,200 ஆக இருந்தது. பிறகு, விலை சற்று குறைந்தது. கடந்த 19-ம் தேதி முதல் தங்கம்விலை மீண்டும் உயரத் தொடங் கியது. இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் நேற்று முன்தினம் ஒருகிராம் ரூ.6,140, ஒரு பவுன் ரூ.49,120என விற்கப்பட்ட நிலையில், நேற்றுஒரே நாளில் கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.6,235-க்கும், ஒரு பவுன் ரூ.49,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பவுன் விலை ரூ.50 ஆயிரத்தைநெருங்கியதால், திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த காரியங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி,பொருளாதார குறியீடு மற்றும் வேலைவாய்ப்பு குறியீடு கீழ்நோக்கி சென்றது, வங்கியில் வைப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு போன்ற காரணங்களால் பெரிய முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பாதுகாப்பான முதலீடு என்று, தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதி கரித்துள்ளது.

இதனால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. இதன்தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. விரைவில் பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in