Published : 01 Feb 2018 10:26 AM
Last Updated : 01 Feb 2018 10:26 AM

இவரை தெரியுமா?: உல்ஃப்காங்க் புரோக் ஷாயெர்

இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஓ.ஓ) சில நாட்களுக்கு முன்பு இவர் நியமனம் செய்யப்பட்டார். முன்பு கோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

ஐரோப்பா மற்றும் ஆசியா வில் உள்ள முக்கிய விமான நிறுவனங்களில் 36 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், பிரிட்டிஷ் மிட்லேண்ட் இண்டர்நேஷனல், ஏர் பெர்லின் மற்றும் கோ ஏர் ஆகிய விமான நிறுவனங்களின் பணியாற்றி இருக்கிறார்.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் நிர்வாக படிப்பு படித்திருக்கிறார். 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை இந்தியாவில் (ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ) பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு கோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x