Published : 14 Feb 2018 08:34 AM
Last Updated : 14 Feb 2018 08:34 AM

பிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது: இபிஎஃப் ஆணையம் ஆலோசனை

2017-18-ம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் மாற்றம் ஏதுமின்றி 8.65 சதவீதமாகத் தொடரும் என தகவல் வெளிவந்துள்ளது. பிப்ரவரி 21 அன்று கூடும் இபிஎஃப் ஆணையத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாத தொடக்கத்தில் ரூ.2,886 கோடி மதிப்புள்ள பங்கு சார்ந்த முதலீட்டினை (ETF) விற்றுள்ளது. 8.65 சதவீத வட்டியை வழங்குவதற்கு ஏதுவாக இவை விற்கப்பட்டதாக தெரிகிறது. எனவே 2017-18-ம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. 2015-16-ம் நிதியாண் டில் இபிஎஃப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது. இது 2016-17 நிதியாண்டில் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது.இந்த நிதியாண்டில் வருவாய் பெறுவதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இடிஎப் பங்குகளை விற்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

ஆகஸ்டு 2015 முதல் இபிஎஃப் ஆணையம் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. இதுவரை இந்த முதலீடு பணமாக மாற்றப்படவில்லை. இதுவரை பங்கு சந்தையில் ரூ. 44,000 கோடியை இபிஎஃப் ஆணையம் முதலீடு செய்துள் ளது குறிப்பிடத்தக்கது. பங்கு முதலீடுகளை உறுப்பினர்களின் இபிஎஃப் கணக்கில் செலுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இபிஎஃப் ஆணையத்தில் சுமார் ஐந்து கோடிப்பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிபிஎப் கணக்கு

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கை முன்கூட்டியே முடிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதே போல சிறு சேமிப்பு திட்டங்களை 18-வயதுக்கு கீழே இருப்பவர்களின் பெயர்களில் தொடங்குவதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கி றது.

நிதி மசோதா 2018-ல் இந்த மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், இதன் மூலம் சிறு சேமிப்பு திட்டங்களை கையாளுவது எளிமையாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் தற்போது இருக் கும் சலுகைகள் நீக்கப்படாது. அதேசமயத்தில் முதலீட்டாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் புதிய சலுகைகள் இந்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அவசர கால மருத்துவ செலவுகள் மற்றும் உயர்கல்வி தேவைகளின் போது இந்த வகையான சிறு சேமிப்பு திட்டங்களில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். தற்போது பிபிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்க முடியாது. புதிய மசோதாவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பாக முடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். அதே சமயத்தில் சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் மற்றும் வரி விகிதம் தொடர்பாக எந்த விதமான மாற்றங்களும் இந்த மசோதாவில் செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x