Published : 27 Feb 2018 08:17 AM
Last Updated : 27 Feb 2018 08:17 AM

சென்செக்ஸ் பங்குகள் பரிவர்த்தனை கட்டணம் தள்ளுபடி

சென்சென்ஸ் 30 பங்கு வர்த்தகத்துக்கான பரிவர்த்தனைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்இ திங்கள் கிழமை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 12-ம் தேதியிலிருந்து இதை நடைமுறைப்படுத்த உள்ளது.

மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள செய்தியில், பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு இந்திய பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாக உள்ளது. சென்செக்ஸ் பங்குகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், முக்கிய நிறுவன பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தற்போது சென்சென்ஸ் 30 பங்குகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணம் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. குறிப்பாக ஒரு பரிவர்த்தனைக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை இந்த பரிவர்த்தனைக் கட்டணமாக உளளது.

சென்செக்ஸ் 30 பங்குகளின் பட்டியலில் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இந்த் வங்கி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் வங்கி, எம் அண்ட் எம், அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த பங்குகள் தவிர மதிப்பின் அடிப்படையில், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா, யெஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சன் பார்மா, பவர் கிரிட், ஹீரோ மோட்டோ கார்ப், நிறுவனங்களும் சென்செக்ஸ் 30 குறியீட்டில் வர்த்தகம் ஆகின்றன. நிதி ஸ்திரத்தன்மை, அதிக சந்தை மதிப்பு, அதிக வர்த்தகமாகும் பங்குகள் அடிப்படையில் சென்செக்ஸ் 30 பங்குகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

-ஐஏன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x