சென்னையில் மார்ச் 16-ல் மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்க மகளிர் தின விருதுகள் விழா

சென்னையில் மார்ச் 16-ல் மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்க மகளிர் தின விருதுகள் விழா
Updated on
1 min read

சென்னை: வரும் 16-ம் தேதி காலை 9.30 மணி முதல், சென்னை கிண்டியில் மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்று தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கமானது பெண்களால் பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது.

வரும் மார்ச் 16-ம் தேதி சனிக்கிழமை கிண்டியில் உள்ள சிட்கோ அரங்கத்தில் (காவல் நிலையம் அருகில்) மகளிர் தின விருதுகள் மற்றும் விற்பனை கூடங்கள், பெண்கள் திறனுக்கேற்ற போட்டிகள், கலை நிகழ்வுகள் காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது.

இதில் பங்கு பெற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.பெண்கள் தாங்களே தயாரித்து விற்பனை செய்யும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தேர்ந்தெடுத்த அழகு கலை நிபுணர் மூலம் ஸாரீ டிராப்பிங் பயிற்சி கொடுக்கப்படும்.

இப்பயிற்சியைக் கற்றுக்கொண்டு, விழா காலங்கள் மற்றும் மணப்பெண் அலங்காரத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பெண்கள் இதன்மூலம் பயன் பெறலாம். இதற்கான முன்பதிவுக்கு குறுந்தகவல் செய்ய வேண்டிய எண்கள் 9361086551 / 7871702700 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in