

பொதுத்துறை வங்கிகள்/நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கொச்சாரின் ஆண்டு சம்பளம் 5.08 கோடி ரூபாய். ஹெச்.டி.எப்.சி. வங்கியின் தலைவர் ஆதித்யா பூரியின் ஆண்டு சம்பளம் 6 கோடி ரூபாய். மாறாக பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ் முந்த்ராவின் ஆண்டு சம்பளம் 26 லட்ச ரூபாயாகவும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் சம்பளம் 18 லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது. இவருக்கு முன்பு தலைவராக இருந்த பிரதீப் சௌத்திரியின் ஆண்டு சம்பளம் ரூ. 23 லட்சமாக இருந்தது.
அதேபோல என்.டிபிசியின் தலைவர் அருப் சௌத்திரியின் வருமானம் ரூ. 52 லட்சமாக இருக்கிறது. ஆனால் இதே துறையில் இருக்கும் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் சர்தானாவின் ஆண்டு வருமானம் 4.4 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் டாடா பவர் நிறுவனம் 260 கோடி ரூபாய் நஷ்டத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.