Published : 02 Feb 2018 15:02 pm

Updated : 02 Feb 2018 15:47 pm

 

Published : 02 Feb 2018 03:02 PM
Last Updated : 02 Feb 2018 03:47 PM

இந்தியாவில் பலசரக்கு விற்பனை: ஆன்லைனில் களம் இறங்கும் சீனாவின் அலிபாபா

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஆன்லைன் மூலம் பலசரக்கு வியாபாரத்தில் அலிபாபா நிறுவனம் இறங்குகிறது.

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனமும் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கிறது.

இந்நிறுவனம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை புரிந்து வருகிறது.

சீனாவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக விளங்கும் சன் ஆர்ட் ரீடைல் குழும நிறுவனத்தில், அலிபாபா நிறுவனம் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதன் மூலம் ஆன்லைன் மற்றும் நேரடி சில்லறை விற்பனையிலும், அலிபாபா நிறுவனம் இறங்கியது.

இந்நிலையில், சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பலசரக்கு வியாபாத்தில் அலிபாபா நிறுவனம் இறங்குகிறது.

இதற்காக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பலசரக்கு வர்த்தக நிறுவனமான 'பிக்பேஸ்கட' நிறுவனத்துடன் அலிபாபா கைகோக்கிறது. அந்நிறுவனத்தில் 950 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்திற்கு அலிபாபா கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பேஸ்கட் நிறுவனம், பெங்களூரை தலைமையிடமாகg கொண்டு நாட்டின் பல நகரங்களிலும் கிளை பரப்பி வர்த்தகம் செய்து வருகிறது. அந்நிறுவனத்திற்கு 60 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதேபோல் அலிபாபா நிறுவனமும் மொபைல் உட்பட பல்வேறு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author