வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1,960-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1,960-க்கு விற்பனை
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்றைக்கே அமலுக்கு வந்தது.
புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ,1,795 -க்கும், மும்பையில் ரூ.1749-க்கும், சென்னையில் ரூ.1,960-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911-க்கும் விற்கப்படுகிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in