

டிபிஎஸ் வங்கி காப்பீட்டுத் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு ராயல் சுந்தரம் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப் பந்தம் செய்து கொண்டுள்ளது. நிதிச் சேவையில் ஆசிய பிராந்தியத்தில் முன்னணியில் உள்ள டிபிஎஸ் பொதுக் காப்பீட்டு திட்டங்களை தனது வங்கிக் கிளையில் விற்பனை செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி ராயல் சுந்தரம் நிறுவனம் வெளியிடும் அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் டிபிஎஸ் வங்கியின் 12 கிளைகளில் விற்பனை செய்யப்படும். ராயல் சுந்தரம் நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களில் 15 சதவீதம் வங்கிக் கிளைகளின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தங்களது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் பிம்பெட் தெரிவித்துள்ளார்.