வேளாண் துறைக்கு ரூ.20.39 லட்சம் கோடி கடன்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையில் மட்டும் ரூ.20.39 லட்சம் கோடி கடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் முடிவில் கடன் விநியோகம், ரூ.22 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் நோக்கில், வேளாண் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் துறைக்கான கடன் விநியோகம் அதிகரித்துள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் வேளாண்துறைக்கு ரூ.7.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. இதுவே 2023-24 நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.20.39 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in