கோப்புப்படம்
கோப்புப்படம்

வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

Published on

புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகார செயலர் ரோஹித் குமார் கூறியது.. வங்கதேசம், மொரீஷியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31 வரை 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வணிகர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வங்கதேசத்துக்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூடானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிகர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட இந்த அளவிலான ஏற்றுமதியை மேற்கொள்ளலாம். வெளியுறவுஅமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரோஹித் குமார் தெரிவித்தார்.

உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த டிசம்பர் 8, 2023 அன்று வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in