

அமேசான் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால், உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனம் என்ற பட்டியலில் மைக்ரோசாப்டை முந்தியுள்ளது.
அமெரிக்க தினசரி ஒன்றில் அமேசான் நிறுவன பங்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு 702.5 பில்லியன் டாலர்களாகும். மைக்ரோசாப்ட் பங்குகளின் மதிப்பு 699.2 பில்லியன் டாலர்களாகும்.
ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆல்ஃபட் நிறுவனங்கள் முறையே 849.2 பில்லியன் டாலர்கள் மற்றும் 745.1 பில்லியன் டாலர்களுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. பேஸ்புக் நிறுவனம் 521.5 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு இதுவரை இருந்த பணக்காரர்களை விட அதிகமாக உள்ளது. ப்ளூம்பெர்க், பெஸோஸின் மதிப்பு 106 பில்லியன் டாலர்களை தொட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. ஃபோர்ப்ஸ், 105 பில்லியன் டாலர்கள் என்று கூறியுள்ளது.
பெஸோஸின் பெரும்பாலான சொத்து மதிப்பு அவர் வைத்திருக்கும் 78.9 மில்லியன் அமேசான் பங்குகளை வைத்தே வந்துள்ளது.
இதற்கு முன் 1999 ஆண்டு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியதே அதிகபட்சமாக இருந்தது.