Published : 26 Feb 2018 07:36 AM
Last Updated : 26 Feb 2018 07:36 AM

பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பு நீரவ் மோடி ரூ.90 கோடி டெபாசிட்: தேசியவாத காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப் படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.90 கோடியை நீரவ் மோடி முதலீடு செய்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஜித் மேமன் குற்றம் சாட்டியிருக்கிறார். பணமதிப்பு நீக்கம் 2016-ம் ஆண்டு நவம்பர் இரவு எட்டு மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக தங்கம் உள்ளிட்டவற்றை மாற்றி இருக்கலாம். இது குறித்து முறையான விசாரணை தேவை என்று கூறியவர், மத்தி யில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசாங்கத்துக்கு தெரியாமல் இந்த முதலீடு நடந்திருக்காது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

நீரவ் மோடி மீது ரூ.11,400 கோடி மற்றும் ரூ.280 கோடி மோசடி வழக்கினை பஞ்சாப் நேஷனல் வங்கி தொடுத்திருக்கிறது. நீரவ் மோடி மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பணியாளர்கள் என பலரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வழக்குப் பதிவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நீரவ் மோடி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதேபோன்ற குற்றச்சாட்டினைச் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயம் இந்த மோசடிக்கான ஆரம்பகாலம் ஆகும். மக்களிடம் இருந்த மொத்தப் பணமும் வங்கிகளுக்கு சென்றுவிட்டது. அரசின் உயர்மட்ட அளவிலான பாதுகாப்பு இல்லாமல் வங்கி மோசடி நடந்திருக்காது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x