

பொதுமக்களிடமிருந்து நிதிதிரட்டி மோசடி செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெபாசிட்டுக்கான விதிமுறைகளை மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் சாரதா சிட் நிறுவனம் மற்றும் பிஏசிஎல் ஆகிய நிறுவனங்கள் பொதுமக் களிடமிருந்து நிதி திரட்டி மோசடி செய்தன. இதைத் தொடர்ந்தே டெபாசிட் என்பதற்கான விதி முறையை மாற்றியமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.
வங்கிகளைப் பொறுத்தமட்டில் டெபாசிட் என்பதற்கு தெளிவான வரையறை உள்ளது. ஆனால் பிற தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது இதன் கீழ் வராது. அவ்விதம் டெபாசிட் திரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு ஏற்ப டெபாசிட் என்பதற்கான வரை யறையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் என்பதற்கு தெளிவான வரையறை வகுக்கப்பட்ட பிறகு, பொதுமக் களிடமிருந்து நிதி திரட்டும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
மும்பையில் மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் நிதிச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை மேலும் வலுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப் படுவதாகக் கூறினார். அப்போது தான் அங்கீகாரம் இல்லாத நிறுவனங் கள் டெபாசிட் திரட்டுவதை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
டெல்லியைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல் படும் ரியல் எஸ்டேட் நிறுவ னமான பிஏசிஎல், பொதுமக் களிடமிருந்து திரட்டிய ரூ. 49,100 கோடியை திருப்பித் தரும்படி செபி உத்தரவிட்டது. ஏற்கெனவே கொல்கத்தாவைச் சேர்ந்த சாரதா சிட் நிறுவனம் பெருமளவு டெபாசிட்டுகளை திரட்டி பொதுமக்களை ஏமாற்றி விட்டது. சகாரா குழுமத்தின் 2 நிறுவனங்களும் நிதி திரட்டியுள்ளன.
இத்தகைய சூழலில் டெபாசிட்டுக்கான வரையறை வகுக்கப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலங்களின் நிதி நிலை, நிதி வளம் உள்ளிட்ட பல விஷயங்கள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ரகுராம் ராஜன் கூறினார்.