Published : 13 Feb 2018 10:05 AM
Last Updated : 13 Feb 2018 10:05 AM

இவரைத் தெரியுமா? - சஞ்சய் மெஹ்ரோத்ரா

# மின்னணு நினைவகக் கருவி தயாரிப்பு நிறுவனமான மைக் ரோன் டெக்னாலஜி நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி. 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

# இதற்கு முன்னர் சான்டிஸ்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

# இண்டெல் கார்ப்பரேஷன், அட் மெல் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி யுள்ளார்.

# கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.

# அழியாத நினைவக வடிவமைப்பு மற்றும் ஃபிளாஷ் நினைவகங்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்துள்ளார். பல்வேறு காப்புரிமைகள் பெற்றுள்ளார். இந்த துறையில் 29 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

# பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சான்டிஸ்க் வழியாக உருவாக்கிய திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சேவைகளுக்காக அமெரிக்கன் இந்தியா அமைப்பால் கெளரவிக்கப் பட்டிருக்கிறார்.

# சிலிக்கான் வேலி தொழில்முனைவோர் அமைப்பு வழங்கிய 2013-ம் ஆண்டின் சிறந்த தலைமைச் செயல் அதிகாரி விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x