

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை இரண்டாம் காலாண்டில் 16 சதவீதம் குறைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் (மார்ச் முதல் ஜூன் வரை) தங்கத்தின் தேவை 1,148 டன்னாக இருந்தது. ஆனால் இப்போது 964 டன்னாக குறைந்துள்ளது.
தங்க நகைகளுக்கான தேவை கடந்த காலாண்டில் 30 சதவீதம் குறைந்து 510 டன்னாக இருக்கிறது. ஆனால் மத்திய வங்கிகள் கடந்த வருடத்தின் இதே காலாண்டை விட இப்போது 28 சதவீதம் அதிகம் வாங்கி இருக்கின்றன. டாலருக்கு எதிராக தங்கத்தை அவர்கள் ஹெட்ஜ் செய்திருக்கிறார்கள். ஆனால் நாணயம் மற்றும் பார் தங்கத்தின் தேவை 56% சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 628 டன்னாக இருந்தது, இப்போது சரிந்து 275 டன்னாக இருக்கிறது. தங்கத்தின் விலை பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக முதலீட்டாளர்கள் நினைத்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாததால் வர்த்தகர்களும் பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இடிஎப் முதலீடு சிறிதளவு உயர்ந்திருக்கிறது.