பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ்-மிட்கேப் பண்ட் அறிமுகம்

பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ்-மிட்கேப் பண்ட் அறிமுகம்
Updated on
1 min read

மும்பை: பஜாஜ் ஃபின்சர்வ் அஸட் மேனேஜ்மென்ட் தலைமைச் செயல் அதிகாரி கணேஷ் மோகன் கூறியுள்ளதாவது:

நீண்ட கால அடிப்படையில் லாபத்தை உறுதி செய்ய லார்ஜ்மற்றும் மிட்கேப் பண்ட் திட்டங்களை பஜாஜ் அறிமுகம் செய்துள்ளது. இந்த என்எஃப்ஓ திட்டத்தில் பிப்ரவரி 20 வரை முதலீடு செய்யலாம். அனுபவமிக்க வல்லுநர்குழு சந்தை ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாக கண்டறிந்துமுதலீட்டாளர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்போலியோவை வடிவமைத்துள்ளது. நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திறன் கொண்ட வணிக மாதிரிகளை அடையாளம் காண்பதற்கான வலுவான கட்டமைப்பாக இந்த திட்டம் விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in