Published : 27 Feb 2018 08:15 AM
Last Updated : 27 Feb 2018 08:15 AM

இவரை தெரியுமா?: ஜெஃப் மெஜியோன்கால்டா

கோர்செரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

சிலிக்கான் வேலி வங்கியின் அறிவுரையாளர் குழு உட்பட பல குழுக்களில் உறுப்பின ராக இருந்த அனுபவம் கொண்டவர்.

பைனான்சியல் இன்ஜின் நிறுவனத்தின் இணை நிறுவனர். 18 ஆண்டுகள் பைனான்சியல் இன்ஜின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

மெக்கன்ஸி அண்ட் கம்பெனியில் பெரிய வங்கிகளின் பேமெண்ட் உத்திகளை மேம்படுத்தும் பொறுப்பை வகித்தவர்.

கார்னர்ஸ்டோன் ரிசர்ச் நிறுவனத்தில் வணிக வழக்குகளுக்கான ஆலோசனை குழுவில் பணியாற்றியவர்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் ஆங்கிலப் பட்டமும் ஸ்டான்ஃபோர்டு ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x