காலாண்டு முடிவுகள் - 03/08/2014

காலாண்டு முடிவுகள் - 03/08/2014
Updated on
1 min read

ஆந்திரா வங்கி நிகரலாபம் 53% சரிவு

ஆந்திரா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 53 சதவீதம் சரிந்து ரூ.107 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் 231 கோடி ரூபாயாக இருந்தது.

கடன் தள்ளுபடி காரணமாக விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் விவசாய கடன் 1,078 கோடி ரூபாய் வாராக்கடனாக மாறிவிட்டது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிகர வட்டி வருமானம் 12.5% உயர்ந்தது. நிகர வட்டி வரம்பு 2.14 சதவீதமாக குறைந்தது. விவசாயக் கடனை தவிர்த்து பார்க்கும்போது நிகர வட்டி வரம்பு 3 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.

கிராசிம் நிகர லாபம் 20% சரிவு

ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 20% சரிந்து 487 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610 கோடியாக நிகரலாபம் இருந்தது.

நிகர விற்பனை 16% உயர்ந்து ரூ. 7,976 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,893 கோடியாக இருந்தது. பைபர்(விஎஸ்எப்) மற்றும் சிமென்ட் பிஸினஸில் விலைப் போட்டி காரணமாக லாபம் சரிந்தது. இந்த துறைகளில் நிலவும் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இருக்கிறது. விஎஸ்எப் விற்பனை 11% உயர்ந்திருக்கிறது. கெமிக்கல் விற்பனை 33% உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர கடன் 6,167 கோடியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in