Published : 19 Feb 2018 07:59 AM
Last Updated : 19 Feb 2018 07:59 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக 15 நகரங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முடிவடைந்தது. 15 நகரங்களில் 45 இடங்களுக்கு மேல் இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 10 இடங்கள், டெல்லியில் 7 இடங்கள், கொல்கத்தா மற்றும் மும்பையில் தலா ஐந்து இடங்கள், சண்டிகர், ஹைதராபாத் நகரங்களில் தலா 4 இடங்கள், பாட்னா, லக்னோ ஆகிய நகரங்களில் தலா மூன்று இடங்கள், அகமதாபாத்தில் இரு இடங்கள், சென்னை மற்றும் குவஹாத்தி யில் தலா ஒரு இடத்தில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனை நேற்று முடிவடைந்தது.

வெள்ளிக்கிழமை 35 இடங்களிலும், சனிக்கிழமை 21 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ரூ.11,400 கோடி மோசடி வழக்கில் சம்பந்தம் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த இடங்களில் இருந்து 5,674 கோடி ரூபாய் தங்கம், வைரம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வியாழன் அன்று பண மோசடி தடுப்புச் சட்டத்தில் நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் டைமண்ட் ஆர்யூ, சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டன. நிரவ் மோடி மீது மத்திய புலனாய்வு துறை மோசடி வழக்கினை பதிவு செய்ததை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்தது.

கீதாஞ்சலி குழுமத்தின் நிர் வாக இயக்குநர் மெகுல் சோக்ஷி உள்ளிட்ட இயக்குநர் குழு உறுப்பினர்கள் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மோசடி வழக்கில் நேரடியாக தொடர்புடைய இரண்டு வங்கி பணியாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x