

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு இருப்பதால் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை கள் ஏறு முகத்தில் இருக்கின்றன. தொடர்ந்து ஏழாவது மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் உய ர்ந்து முடிவடைந்தன. மத்திய அரசில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை, புதிய நிலையான அரசு அமைந்திருப்பது ஆகிய கார ணங்களைத் தொடர்ந்து ஏழாவது மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பங்குச்சந்தைகள் உயர்ந்தே முடிவடைந்திருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் இருந்து இதுவரை இந்திய பங்குச்சந்தைகள் 27% உயர்ந்துள்ளன.
ஆகஸ்ட் மாத டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை வெளியாகும் ஜூன் காலாண்டு ஜிடிபி சாதகமாக வரும் என்பன உள்ளிட்ட நம்பிக் கைகள் காரணமாக பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் முடிவ டைந்தன.
சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்ந்து 26638 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 26674 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 7954 என்ற புள்ளியில் முடிவடைந்தது.
கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ் துறைகளில் வாங்கும் போக்கு இருந்தது. ரியால்டி, ஐடி மற்றும் மெட்டல் துறை பங்குகளில் விற்கும் போக்கு இருந்தது. ஆனால் மிட்கேப் குறியீடு சிறிதளவு சரிந்தும், ஸ்மால்கேப் குறியீடு பெரிய ஏற்றம் இல்லாமலும் முடிந்தது.
கேபிடல் குட்ஸ் துறையில் சென் செக்ஸ் பட்டி யலில் இருக்கும் பி.ஹெச்.இ.எல். பங்கு 5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. மேலும், நால்கோ, ஜி.எம்.டி.சி., டாடா கம்யூனி கேஷன்ஸ், இந்தியன் ஓட்டல், என்.ஹெச்.பி.சி., இன்பிரா டெல், நெஸ்லே, ஐடியா ஆகிய பங்குகள் கணி சமாக உயர்ந்தன.
இந்தியன் வங்கி, புஷான் ஸ்டீல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜே.பி.பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஹெவல்ஸ் இந்தியா, ஆந்திரா வங்கி, ஜே.பி.அசோசியேட்ஸ் ஆகிய பங்கு சரிந்து முடிவடைந்தன.
புதன்கிழமை 290 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்தார்கள். ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 2,628 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையில் 70,871 கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை.
ஜிடிபி தகவல் இன்று வெளியீடு
ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) ஜூன் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை வெளியிட இருக்கிறது. 2013-14ம் ஆண்டு க்கான ஆண்டு அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.
மூடிஸ் நிறுவனம் 5.1 சதவீதமாக இருக்கும் என்றும், இக்ரா நிறுவனம் 5.5 சதவீதம் என்றும், கோடக் மஹிந்திரா 5.5 சதவீதம் முதல் 5.6 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்திருக் கின்றன.