

முடிக்கப்படாத கட்டுமானத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தி திட்டங்களில் 1,000 கோடி டாலர்களை முதலீடு செய்ய ஹிந்துஜா குழுமம் முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் பல திட்டங்கள் நிறைவு பெறாததால் வங்கிகளுக்கு வாராக்கடன்களாக இருக்கின்றன.
இந்தத் திட்டங்களுக்கு முதலீடு செய்யும்போது, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக லண்டன் டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் கோபிசந்த் ஹிந்துஜா கூறும் போது பிரதமர் மோடியின் அரசில் இங்கிலாந்து தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.