Last Updated : 01 Feb, 2018 05:25 PM

 

Published : 01 Feb 2018 05:25 PM
Last Updated : 01 Feb 2018 05:25 PM

மத்திய பட்ஜெட்: சொத்தை விற்று கடனை அடைக்கும் போக்கு சரியல்ல; பொருளாதார நிபுணர்கள் கருத்து

 

2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று (வியாழன்) தாக்கல் செய்தார். இதுகுறித்து பல்வேறு பொருளாதார ஆலோசகர்களும் தி இந்துவுக்கு (தமிழ்) கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்புக்கிடையே, சாதாரண பட்ஜெட்

soma -1PNGசோம. வள்ளியப்பன் 

பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது:

‘‘தேர்தலை மனிதில் கொண்டு செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாகவே செய்யப்பட்டு வரும் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பட்ஜெட் உள்ளது. மருத்துவம், விவசாயத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. நடுத்தர வகுப்பினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பு விலக்கு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுமட்டுமின்றி கல்விக்காக கூடுதலாக ஒரு சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது மேலும் சுமையை ஏற்றியுள்ளது.

பங்குச்சந்தை சார்ந்த ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீiட்டு ஆதாயங்களுக்கு 10 சதவீத வரி என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். அதிகமான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடன் சரிவடைந்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இந்த வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அரசு செய்தது போல கார்ப்பரேட் வரி கணிசமாக குறைக்கப்படும் என கார்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால், அவ்வாறு செய்யாமல், ஏற்கெனவே 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 30% இருந்து 25% வரி குறைப்பு, 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்புக்கு இருந்து வரும் வரி விலக்கு 10,0000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதும் வரவேற்கதக்கது. மொத்தத்தில் அதிகமான எதிர்பார்ப்புக்கிடையே, சாதாரண பட்ஜெட் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

சொத்தை விற்று கடனை அடைக்க கூடாது

 

download 4jpgவெங்கடேஷ் ஆத்ரேயா 

பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா மத்திய பட்ஜெட் குறித்து கூறியுள்ளதாவது:

‘‘இந்த அரசு 1.5 கோடி பேருக்கு வேலை தருவாக கூறி பதவிக்கு வந்தது. ஆனால், எந்தவித வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வேலையில்லா திட்டத்தை தீர்ப்பதற்கான திட்டங்களோ, அறிவிப்புகளோ பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி நம்நாட்டில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், நமது பணம் அதிகமாக வெளியேறி வருகிறது. இதனால் பங்குச்சந்தை உள்ளிட்ட முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

பற்றாக்குறையை குறைக்க பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்த வகையில் இது செய்யப்படும் என தெரிவிக்கப்படவில்லை. சொத்தை விற்று கடனை அடைக்கும் இதுபோன்று போன்ற செயல் ஆரோக்கியமானதல்ல’’

இவ்வாறு வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.

சில வருத்தங்கள், சில சந்தோஷங்கள்

gowri -2PNGகெளரி ராமச்சந்திரன் 

இந்துஸ்தான் சேம்பர் அமைப்பைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகர் கெளரி ராமச்சந்திரன் கூறியதாவது:

‘‘கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் வரி விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பொருளாதார சவால்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, இந்தியாவிலும், பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் வரவுள்ளது. இந்த சூழலில் சவால்களுக்கு இடையே  பட்ஜெட் தாக்காலாகியுள்ளது.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான கடனுதவி, நீர்பாசன உதவி சூரிய ஒளி மின்சாரம், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கான திட்டம் போன்றவை வரவேற்க தக்கது.

தனி மனிதன் என பார்க்கும்போது, உடல் நலம் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் வரவேற்க தக்கது. பல கோடி பேருக்கு 5 லட்சம் வரையில் இன்சூரன்ஸ் வழங்குவது பாராட்டதக்கது. உலக அளவில்  இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைவர். அமெரிக்காவில் ஒபாமா கேர் என அழைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்களை விடவும் இதில் சிறந்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தனி நபர் வருமான வரியில் சலுகைகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. ஆனால் உச்ச வரம்பு உயர்த்தப்படாததுடன் மற்ற பல சலுகைகளும் வழங்கப்படவில்லை. நிலையான கழிவு 40,000 ரூபாய் தந்துள்ளது மட்டுமே ஒரே ஆறுதல்.

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட வில்லை. தொடர்ந்து 20 சதவீதமாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. ஆனால் இந்த எதி்ரபார்ப்பு நிறைவேறவில்லை.

சில சில வருத்தம், சில சில சந்தோஷங்களை கொடுத்த சமனநிலை படஜெட்டாக இதனை நான் பார்க்கிறேன்’’

இவ்வாறு கெளரி ராமச்சந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x