சென்னை துறைமுகம் ஒரே நாளில் 3.40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

சென்னை துறைமுகம் ஒரே நாளில் 3.40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
Updated on
1 min read

சென்னை: சென்னை துறைமுகம் கடந்த 27-ம் தேதி ஒரே நாளில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 583 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதில், பெரிய எண்ணிக்கையிலான சரக்குகள் 36 ஆயிரத்து 184 டன், திரவ சரக்குகள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 575 டன், கன்டெய்னர் சரக்குகள் 1 லட்சத்து 75 ஆயிரத்து 824டன் ஆகியவை அடங்கும்.

இதற்கு முன்பு, கடந்த 2021 ஏப்.30-ம் தேதி மிக அதிக அளவாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 459 டன் சரக்குகள் கையாண்டதே பெரிய சாதனை அளவாக இருந்தது. புதிய சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோருக்கு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in