அதிக சப்ஸ்கிரைபர்கள் உடன் உலகின் டாப் 10 யூடியூப் சேனல் பட்டியலில் 3 இந்திய சேனல்கள்!

அதிக சப்ஸ்கிரைபர்கள் உடன் உலகின் டாப் 10 யூடியூப் சேனல் பட்டியலில் 3 இந்திய சேனல்கள்!
Updated on
1 min read

சென்னை: சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் டாப் 10 யூடியூப் சேனல் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவின் மூன்று யூடியூப் சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இதனை ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2005-ல் அறிமுகமானது. டிஜிட்டல் பயன்பாட்டில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றமும் செய்ய முடியும். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம். இந்நிலையில், உலக அளவில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்டுள்ள டாப் 10 யூடியூப் சேனல்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

  • T-Series - சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையில் உலகின் நம்பர் 1 யூடியூப் சேனல். சுமார் 257 மில்லியன் பேர் இதன் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இந்தி மொழியில் இந்தியாவில் இருந்து இந்த சேனல் இயங்கி வருகிறது.
  • Mr.Beast - 232 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், அமெரிக்கா.
  • Cocomelon - 3டி வடிவிலான மழலையர் ரைம்ஸ் பாடல்கள் ஸ்ட்ரீம் ஆகும் சேனல். 170 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.
  • சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷன் - இந்தியாவில் இருந்து இயங்கி வரும் இந்த சேனல் 167 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.
  • கிட்ஸ் டயானா ஷோ - 118 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
  • PewDiePie - 111 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், ஸ்வீடன்.
  • Like Nastya - 112 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், அமெரிக்கா.
  • Vlad and Niki - சாகச பயணங்களை ஸ்ட்ரீம் செய்யும் இந்த சேனல் 108 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த சகோதரர்கள் இதில் கன்டென்ட் தயாரித்து வருகின்றனர்.
  • ஜி மியூசிக் கம்பெனி - 104 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், இந்தியா
  • வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் - தொழில்முறை ரெஸ்லிங் போட்டிகள் ஒளிபரப்பாகி வருகிறது. 99 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், அமெரிக்கா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in