பொங்கல் பண்டிகையையொட்டி வட சந்தையூரில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோப்பு படம்
கோப்பு படம்
Updated on
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வட சந்தையூரில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை வருவதையொட்டி நேற்று கூடிய சந்தையில் விற்பனை களைகட்டியிருந்தது.

ஏராளமான ஆடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை விற்கவும், வாங்கவும் ஏராளமான விவசாயிகள்,பொதுமக்கள், வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று அதிகாலை முதல் நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் வெகு விரைவில் விற்பனையாகின.

வளர்ப்பு குட்டிகள் ரூ.3 ஆயிரம் முதல் விற்பனையானது. வளர்ந்தஆடுகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1.50 கோடி அளவிற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in