கோடக் மஹிந்திரா லைஃப் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

கோடக் மஹிந்திரா லைஃப் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் யூனிட்டுடன் இணைக்கப்பட்ட நீண்டகாலக் காப்பீட்டு திட்டத்தை (TULIP - Term with Unit Linked Insurance Plan) அறிமுகம் செய்யதுள்ளது.

இது வருடாந்திர பிரீமியத் தொகை மீது 100 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டை வழங்கும் திட்டம் என்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் இறப்பு உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் சொத்து மதிப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை (TULIP) அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிசார் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in