

சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் யூடியூப் சேனலை உருவாக்கும் முறை தொடர்பான பயிற்சி நாளை (ஜன.9) முதல் 11-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. காலை 10 முதல்மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் இணையதளத்தை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் யூடியூப் சேனல் உருவாக்கம், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், ஆன்லைன் மார்க்கெட்டிங், ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவுக்கு 86681 02600 மற்றும் 86681 00181 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.