Published : 12 Jan 2018 10:24 AM
Last Updated : 12 Jan 2018 10:24 AM

பொறுப்புகள் அல்லாத இயக்குநர்களின் தகவல்களை சேகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிபி சவுத்ரி தகவல்

நிறுவனங்களில் எந்தவித பொறுப்புகள் அல்லாமல் உள்ள இயக்குநர்களின் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பிபி சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் நலத்துறை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒரு நிறுவனத்தின் நலன் என்பது முக்கியமான தொழில் பரிவர்த்தனைகளில் இரண்டு நிறுவனங்களுக்கும் ஏதாவது சட்ட ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறதா என்பதை பார்ப்பதே. பொறுப்புகள் அல் லாத இயக்குநர்கள் நிறுவனங்களின் தொழில் பரிவர்த்தனைகளை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்தில் ஊதியம் தொடர்பான பிரச் சினைகள் வரும்பொழுது அதையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும்.

நிறுவனங்கள் சட்டம் பிரிவு 150-ன் படி அரசாங்கம் பொறுப்புகள் அல்லாத இயக்குநர்களின் தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அதனால் தற்போது மத்திய அரசு இந்த சட்டப்பிரிவை முழுமையாக அமல்படுத்த இருக்கிறது. நிறுவனங்களின் பொறுப்புகள் அல்லாத இயக்குநர்களின் தகவல்களை மத்திய அரசு சேகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனங்கள் நலத்துறை கல்வி நிறுவனத்தை மத்திய அரசு பயன்படுத்த இருக்கிறது.

முறைகேடான நிதி சுழற்சியை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. ஏற்கெனவே கிட்டத்தட்ட 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்துசெய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத் தும் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.மேலும் நீண்ட காலம் செயல்படாத நிறுவனங்கள் ஆகும். இதுதவிர 3 லட் சம் நிறுவன இயக்குநர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பிபி சவுத்ரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x