Published : 28 Dec 2023 10:30 AM
Last Updated : 28 Dec 2023 10:30 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று, நியு இந்தியா அஷ்யூரன்ஸ் துணை பொதுமேலாளர் எம்.வி. சந்திரசேகர் தெரிவித்தார். திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்க ளுக்கான இன்சூரன்ஸ் தொகை வழங்குவ தற்காக பல்வேறு இடங்களில் யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் பங்கேற்ற நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் எம்.வி. சந்திரசேகர் மற்றும் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் ஜே.ஜே.பி. பால்சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மோட்டார் வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எங்கள் நிறுவன பாலிசிதாரர்களின் இழப்பீட்டு கோரிக்கைகளை தீர்க்க நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் உதவிகளை தெரிவிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களுக்கு உட்பட்ட பாலிசிதாரர்களுக்கு எங்கள் நிறுவனத்திலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எங்கள் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும். பாதிப்புகளை ஆய்வு செய்ய சர்வேயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதலாக 3 அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3500 வரையிலும், தனியார் கார்கள் மற்றும் டாக்சிகளுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வணிக வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும், வாகனத்தை உடனடியாக பழுது நீக்குதல், பேட்டரி மாற்றுதல், ஆயில், ஸ்பார்க் பிளக் மாற்றுதல், பிரேக்குகளை சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும். வீட்டு சொத்துக்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான கொள்முதல் பில்களை வலியுறுத்தாமல் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT