Published : 17 Jan 2018 10:31 AM
Last Updated : 17 Jan 2018 10:31 AM

மொபிக்விக்-கின் 12.6 % பங்குகளை கையகப்படுத்திய பஜாஜ் பைனான்ஸ்

மொபிக்விக் வாலெட் நிறுவனத்தின் 12.6 சதவீத பங்குகளை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது,

மொபைல் வாலெட் சேவையை அளிக்கும் மொபிக்விக் நிறுவனத்தின் 12.60 சதவீத பங்குகளை பஜாஜ் பைனான்ஸ் கையகப்படுத்த உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொபிக்விக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 10.83 சதவீத பங்குகளை ரூ.225 கோடிக்கு கையகப்படுத்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. நாணய மதிப்பு மாறுதல் காரணமாக தற்போது 12.60 சதவீத பங்குகள் பஜாஜ் பைனான்ஸ் வசம் இருக்கும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை தவிர, தற்போது புதிதாக முதலீடு மேற்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொபிக்விக் நிறுவனத்தின் 10 ஈக்விட்டி பங்குகள் மற்றும் 2,71,050 உறுதியாக மாற்றிக் கொள்ளக்கூடிய மொத்த முன்னுரிமைப் பங்குகளும் இருக்கும். கையகப்படுத்த உள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.92 சதவீதம் சரிந்து ரூ.1,687.35க்கு வர்த்தகம் முடிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x