நேனோ டிராவல்ஸ்: உபெர், ஓலாவுக்கு போட்டியாக தனது மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்த ஓட்டுநர்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: பெரு நகரங்களில் பயணம் மேற்கொள்ள உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் வழங்கும் கார் டாக்சி சேவைகளை மக்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்த சூழலில் பெங்களூருவை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக தனது சொந்த மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளார். இது அவருக்கான தொழில் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த செயலி குறித்த தகவலை பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

நேனோ டிராவல்ஸ் என்ற பெயரில் இயங்கும் செயலிக்கு உயிர் கொடுத்தவர் லோகேஷ் எனும் ஓட்டுநர். அவரது இந்த தொழில் முயற்சிக்கு சக ஓட்டுநர்கள் சுமார் 600 பேர் ஆதரவு கொடுத்து அவருடன் இந்த பயணத்தில் ஓட்டுநர்களாக இணைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தலாம்.

பயனர்கள் தங்களது பயணத்துக்கான ரைட் ரெக்வெஸ்ட் மேற்கொள்ள, பயணத்தை திட்டமிட, அதை டிராக் செய்யவும் முடியும். இந்த செயலியை பயன்படுத்த பயனர்கள் இதில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஓட்டுநர் லோகேஷின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in