Published : 29 Jan 2018 12:53 PM
Last Updated : 29 Jan 2018 12:53 PM

2017-ல் அதிகம் விற்பனையான 10 மொபைல் போன்கள் எவை?

கடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கு 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் தற்போது மொபைல் போன்.

அந்தவகையில், 2017-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலன மொபைல் போன்கள் இந்த அம்சங்களை கொண்டு இருந்தன.

கடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து ‘கவுன்டர்பாயிண்ட்’ ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தம் 10 மொபைல் போன்களில் ஆறு இடங்களை சீன தயாரிப்புகள் பிடித்துள்ளன. குறிப்பாக ஸியோமி நிறுவனத்தின் மூன்று மொபைல் போன்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

முதலிடத்தில் ஸியோமி ரெட்மி நோட் 4 மிகச்சிறந்த மொபைல் போனாக உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான நோட் 4 மூன்று விதங்களில் விற்பனைக்கு வந்தன. 2ஜிபி ரேம்/16ஜிபி ஸ்ட்ரோஜ், 3ஜிபிரேம்/32ஜிபி, 4ஜிபிரேம்/64ஜிபி என மூன்று வித தயாரிப்புகளுமே அதிகஅளவில் வாடிக்கையாளர்களை கவந்துள்ளன.

இரண்டாவது இடத்தில், ஸியோமி ரெட்மி 4 மொபைல் போன் உள்ளது. 2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி ரேம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு வெளியான இந்த போன் நடுத்தர வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது.

முதல் 10 போன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது சாம்சங் கேலக்ஸி ஜே2. கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு வந்த இந்த போன், 4.7 இன்ஞ் டிஸ்பிளேயுடன் ஆன்ராய்டு 7.0 உள்ளிட்டசிறப்பு அம்சங்களை கொண்டு இருந்தது. .

அடுத்ததாக ஆப்போ நிறுவனத்தின் ஆப்போ ஏ37 போனும் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த இந்த போன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

ஸியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை போனான ரெட்மி 4ஏ அதிகம் விற்பனையான போன்களின் வரிசையில் இடம் பிடித்தது. பல்வேறு வசதிகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்ட இந்த போன் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தபோது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் விலை 5,999 ரூபாய் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 என்எக்டி ஜூலை மாதம் அறிமுகமானது. இரண்டு சிம் வசதியுடன், 5.5 இஞ்ச் ஹெடி வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த போன் சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு வரவேற்பு மிக்க மொபைல் போனாகும்.

 

 

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் செப்டம்பர் மாதம் அறிமுகமானது. இந்த போன், 2016ம் ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஜே7 போனில் தரம் உயர்த்தப்பட்டு, 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சாங் நிறுவத்தின் கேலக்ஸி ஜே2 எட்டாவது இடத்தை பிடித்தது மக்களின் வரவேற்பைப் பெற்றது. .

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றான விவோ தயாரிப்பான விவோ ஓய்55எல் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த போன் பட்டியலில் இடம் பிடித்தது.

விவோ ஸ்மார்ட் போன்களில் ஒன்றான, விவோ ஓய்53, 5 இன்ஞ் கியூ எச்டி டிஸ்பிளேயுடன் சந்தைக்கு வந்தது. கேமராவின் சிறப்பு அம்சத்தால் இது அதிகஅளவு வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x