Published : 09 Jan 2018 10:16 AM
Last Updated : 09 Jan 2018 10:16 AM

ஆண்டு நிதி அறிக்கை குழப்பம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விளக்கம்

வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்தவே ஆண்டு நிதி அறிக்கையில் சில சரிகட்டுதல் கள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுப்ரமணிய குமார் கூறினார்.

ஐஓபி வங்கியின் 2017-ம் ஆண்டு இருப்பு நிலை அறிக்கையில் ரூ.9,789 கோடி ஒட்டுமொத்த நஷ்டம் என தள்ளுபடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக சில தவறான புரிதல்கள் உருவானதால் அதற்கு விளக்கம் அளிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சரிகட்டுதல்களை மேற்கொள்வதற்கு முன்னர் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி வாங்கப்பட்டது. பங்கு உரிமை மற்றும் மூலதன அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை. வங்கி யின் சொத்துகளை மறு வரையறை செய்யும் வகையில் சில சரிகட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் வங்கியில் நிகர சொத்து மதிப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

வாராக்கடன் வசூலிப்பது மற்றும் செலவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரூ.6,749 கோடி வாராக்கடனை வங்கி வசூலித்துள்ளது. செயல்பாட்டு லாபத்துக்கும் வாராக்கடன் ஒதுக்கீட்டுக்குமான சரிகட்டல்கள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வரும் காலங்களில் இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களு க்கு பலனளிக்கும் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x