சரக்கு போக்குவரத்து கட்டமைப்பில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னணி

சரக்கு போக்குவரத்து கட்டமைப்பில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னணி
Updated on
1 min read

புதுடெல்லி: லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சியில் சரக்குப் போக்குவரத்தை கையாளுவதற்கான லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பின் அடிப்படையில், மேம்பட்ட பிராந்தியங்கள், வேகமாக முன்னேறி வரும் பிராந்தியங்கள், வலுவான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிராந்தியங்கள் என 3 பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், மேம்பட்ட கட்டமைப்பை கொண்ட பிராந்தியங்களின் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, சண்டிகர், குஜராத், டெல்லி. அசாம், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம். சிக்கிம். திரிபுரா உட்பட 13 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை சென்ற ஆண்டு லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பில் வேகமாக முன்னேறி வரும் பிராந்தியங்களின் வரிசையில் இடம்பிடித்திருந்தன. இந்நிலையில், இவ்வாண்டு அவ்விரு மாநிலங்களும், மேம்பட்ட கட்டமைப்பு கொண்ட பிராந்தியங்களின் வரிசை யில் இடம்பெற்றுள்ளன.

கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம். நாகாலாந்து உள்ளிட்டவை இவ்வாண்டு வேகமாக முன்னேறி வரும் பிராந்தியங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in