சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 71,000-ஐ தொட்டு புதிய உச்சம்! 

சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 71,000-ஐ தொட்டு புதிய உச்சம்! 
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய உச்சம் தொட்டன. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்வடைந்து 70,797 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 21,270 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 480.10 புள்ளிகள் உயர்வடைந்து 70,994.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 145.70 புள்ளிகள் உயர்ந்து 21,328.40 ஆக இருந்தது. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்து 71 ஆயிரத்தை தொட்டது. இது புதிய உச்சம் ஆகும்.

வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 5.25% முதல் 5.5% ஆக நீடிக்கும், மேலும், வரும் 2024-ல் 3 முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்புகளால் சர்வதேச பங்குச் சந்தைகள் உயர்வடைந்துள்ளன. இதன் எதிரொலி காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் புதிய ஏற்றம் பெற்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்ஸ், டாடா ஸ்டீல்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வில் இருந்தன.

நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in