

புதுடெல்லி: இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில், விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்குத் தள்ளி 5-வதுஇடத்துக்கு முன்னேறி இருக்கிறார் சாவித்ரி ஜிண்டால்.
சாவித்ரி ஜிண்டாலின் சொத்துமதிப்பு 24.6 பில்லியன் டாலராகவும் (ரூ.2.04 லட்சம் கோடி) அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலராகவும் (ரூ.1.99 லட்சம் கோடி) உள்ளது.
சாவித்ரி ஜிண்டால் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கவுரவத் தலைவராக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவரது சொத்து மதிப்பு 87% உயர்வுகண்டுள்ளது. இதே காலகட்டத்தில் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 42% சரிவு கண்டுள்ளது.நடப்பாண்டில் மட்டும் ஜேஎஸ்டபிள்யூஎனர்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு59% உயர்ந்தது. இந்நிலையில், சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு பெரும் உயர்வு கண் டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி 3-வது இடத்தில் இருந்தார். அதன்பிறகு அவரது சொத்து மதிப்பு 42%சரிந்த நிலையில் 6-வது இடத் துக்கு நகர்ந்துள்ளார்.
அசிம் பிரேம்ஜி, அதிக நன் கொடை வழங்குபவர்களில் முன்னிலை வகிக்கிறார். நடப்பு ஆண்டில் அவர் ரூ.1,774 கோடி நன் கொடை வழங்கியுள்ளார்.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரூ.7.64 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு கவுதம்அதானி 2-ம் இடத்திலும், ரூ.2.78 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு ஷபூர் பலோஜினி மிஸ்திரி 3-ம் இடத்திலும், ரூ.2.62 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு ஷிவ் நாடார் 4-ம் இடத்திலும் உள்ளனர்.